நெல்லை செல்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.4 மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை செல்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Published on

சென்னை:

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

கனமழை பெய்துவருதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழையின் காரணமாக திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையேயான சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை செல்கிறார்.

வெள்ளம் பாதித்த இடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com