தி.மு.க. இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் வேலூரில் நாளை நடக்கிறது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

கூட்டத்திற்கு தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் இளைஞர் அணியின் மாவட்ட-மாநகர அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் வேலூரில் நாளை நடக்கிறது:  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
Published on

சென்னை:

தி.மு.க. இளைஞர் அணியின் மாவட்ட-மாநகர அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு வேலூர் மாநகராட்சி புதிய பஸ் நிலையம் பின்புறம் அமைந்துள்ள பாப்பிஸ் அனுகுலா ரெசிடென்சி அரங்கில் நடைபெறுகிறது.

கூட்டத்திற்கு தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். மாநில துணை செயலாளர்கள் எஸ்.ஜோயல், இன்பா, ஏ.என்.ரகு, இளையராஜா, அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, கஜேந்திரன், பி.எஸ்.சீனிவாசன், ஜி.பி.ராஜா, சி.ஆனந்த் குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு மாரத்தான் போட்டிகள், பேச்சு போட்டிகள் நடத்துவது, கலைஞர் நூலகம் அமைப்பது, இளைஞர் அணி மாநில மாநாடு மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடத்துவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

கூட்டத்தில் இளைஞர் அணியின் மாவட்ட-மாநகர அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com