மேட்டூர் அணை நீர்மட்டம் 102 அடியாக குறைந்தது

காவிரி டெல்டா பாசனத்துக்கு அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. அணைக்கு வினாடிக்கு 1386 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 102 அடியாக குறைந்தது
Published on

சேலம்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.

அதே நேரம் அணைக்கு வரும் தண்ணீரை விட காவிரி டெல்டா பாசனத்துக்கு அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.37 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1386 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 20 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 67.94 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com