திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் சிசுவை வீசி சென்ற பெண் அடையாளம் தெரிந்தது

குழந்தை சுவற்றில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கடந்த 2 நாட்களாக அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகள் மற்றும் அதன் தாய்மார்கள் விவரம் சேகரிக்கப்பட்டது.
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் சிசுவை வீசி சென்ற பெண் அடையாளம் தெரிந்தது
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறையில் ஒரு ஆண் சிசு இறந்த நிலையில் கிடந்தது. இது குறித்து நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது குழந்தை சுவற்றில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் குழந்தை ஏதேனும் காணாமல் போய் உள்ளதா? என விசாரணை நடத்தப்பட்டது.

கடந்த 2 நாட்களாக அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகள் மற்றும் அதன் தாய்மார்கள் விவரம் சேகரிக்கப்பட்டது. இதில் எந்த குழந்தையும் மாயமாகவில்லை என உறுதி செய்யப்பட்டது.

இந்தநிலையில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் ஆராயப்பட்டது. அதில் நைட்டி அணிந்த ஒரு பெண் துண்டில் குழந்தையை சுற்றி உட்கார்ந்து இருந்தார். இரவு 11 மணி அளவில் அவர் கழிவறைக்கு சென்று 20 நிமிடங்கள் கழித்து வெளியே வந்த காட்சி பதிவாகி இருந்தது.

ஆனால் அவருக்கு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் நடக்க வில்லை. வெளியில் குழந்தை பெற்று அதனை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறையில் வீசி சென்றது உறுதியானது.

அந்த புகைப்படத்தின் அடிப்படையில் குழந்தையை வீசி சென்றது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com