தொடர் விடுமுறை- ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்

ஒரு சில ஆம்னி பஸ்களில் பயணிகளிடம் வழக்கமான கட்டணத்தை விட 2 மடங்கு வரை கூடுதலாக வசூலித்தனர்.ஏ.சி பஸ்களில் வழக்கமான ரூ.800 கட்டணம் விலை அதிகரிக்கப்பட்டு ரூ.1500 வரை வசூலிக்கப்பட்டது. இன்றும் அதே கட்டண உயர்வு நீடித்து வருகிறது.
தொடர் விடுமுறை- ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்
Published on

போரூர்:

தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பள்ளிகளுக்கு ஏற்கனவே கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் வார விடுமுறை நாட்கள் என அடுத்தடுத்து 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் அதிகரித்து உள்ளனர்.

வெளியூர் செல்பவர்களின் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் சென்னையில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தினசரி இயக்கப்படும் வழக்கமான பஸ்களுடன் கூடுதலாக 1000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக அரசு பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும் ஆம்னி பஸ் நிலையத்தில் பயணிகள் நேற்று இரவு அதிகளவில் குவிந்து இருந்தனர். இதை பயன்படுத்தி ஒரு சில ஆம்னி பஸ்களில் பயணிகளிடம் வழக்கமான கட்டணத்தை விட 2 மடங்கு வரை கூடுதலாக வசூலித்தனர்.

ஏ.சி பஸ்களில் வழக்கமான ரூ.800 கட்டணம் விலை அதிகரிக்கப்பட்டு ரூ.1500 வரை வசூலிக்கப்பட்டது. இன்றும் அதே கட்டண உயர்வு நீடித்து வருகிறது.

இதற்கிடையே சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்ட அரசு சிறப்பு பஸ்களில் திருச்சி உள்ளிட்ட இடையில் உள்ள மற்ற இடங்களுக்கு செல்லும் பயணிகளை ஏற்ற மறுத்து விட்டதாக பயணிகள் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து ஒரு பயணி கூறும்போது, மதுரை செல்லும் அரசு சிறப்பு பஸ்சில் இடையில் உள்ள ஊர்களுக்கு செல்லும் பயணிகள் முழு கட்டணம் செலுத்துவதாக கூறியும் பஸ்சில் ஏற்ற டிரைவர், கண்டக்டர் மறுத்துவிட்டனர் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com