தூத்துக்குடி மாவட்ட மக்களின் கவனத்திற்கு...

பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை தீர்க்க வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட மக்களின் கவனத்திற்கு...
Published on

தூத்துக்குடி:

வரலாறு காணாத வகையில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழையால் தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை விட்டும் இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியாததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை தீர்க்க வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் 93840 56221, 73977 31065 என்ற வாட்ஸ்அப் எண்கள் மூலம் மக்கள் குறைகளை தெரிவிக்கலாம். மேலும் Collector Thoothukudi என்ற முகநூல் பக்கத்திலும், @CollectorTuty என்ற X தள பக்கத்திலும் பதிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com