பிரபல யூடியூபர் 'பிரியாணி மேன்' திடீர் கைது

பெண் ஒருவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் யூடியூப்பர் அபிஷேக் ரபி மீது வழக்கு பதிவு செய்தனர்.
biriyani man arrest
Published on

சென்னை:

'பிரியாணி மேன்' என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருபவர் அபிஷேக் ரபி.

இவர் பிரியாணி தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வருவதுடன் சர்ச்சைக்குரிய வகையிலும் கருத்துக்களை தெரிவித்து வருவதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன.

இந்த நிலையில் தனது யூடியூப் பக்கத்தில் அபிஷேக் ரபி, பெண்களை பற்றி அவதூறான கருத்துக்களை கூறி இருந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக பெண் ஒருவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் யூடியூப்பர் அபிஷேக் ரபி மீது வழக்கு பதிவு செய்து, பெண்கள் பற்றிய அவதூறு பேச்சு தொடர்பான தகவல்களை திரட்டினர். இந்த நிலையில் அபிஷேக் ரபியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com