வாக்காளர் பெயர் சேர்ப்பில் ஈடுபட்ட பா.ஜனதா நிர்வாகிகள் மீது தாக்குதல்

சுறா சுமன் பலத்த காயங்களுடன் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாக்காளர் பெயர் சேர்ப்பில் ஈடுபட்ட பா.ஜனதா நிர்வாகிகள் மீது தாக்குதல்
Published on

சென்னை:

சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 116-வது வார்டு அயோத்திக் குப்பம் பகுதியில் பா.ஜனதாவை சேர்ந்த சுறா சுமன் மற்றும் நிர்வாகிகள் வாக்காளர் பெயர் சரிபார்ப்பு முகாம் நடத்தினார்கள்.

மேஜை அமைத்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தி.மு.க. வட்ட செயலாளர் தலைமையிலான கும்பல் திடீரென்று வந்து அங்கு இருந்த பா.ஜனதாவினர் மீது தாக்கு தல் நடத்தினார்கள்.

அவர்களை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினார்கள்.

இதில் சுறா சுமன் பலத்த காயங்களுடன் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற நிர்வாகிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதையடுத்து மெரினா போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com