உங்கள் சாதனைகளால் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்... வைஷாலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

வைஷாலி பிரபல தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆவார்.உங்களின் பயணம் செஸ் ஆர்வலர்களுக்கு மிகவும் உத்வேகம் அளிக்கும்.
உங்கள் சாதனைகளால் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்... வைஷாலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Published on

சென்னை:

தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியாவின் 84-வது செஸ் கிராண்ட்மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் இவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் தமிழக வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். வைஷாலி பிரபல தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆவார்.

இந்நிலையில், வைஷாலிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் 3-வது பெண் கிராண்ட் மாஸ்டரும், தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டருமான வைஷாலிக்கு எனது பாராட்டுகள். நீங்கள் தான் இப்போது முதல் கிராண்ட் மாஸ்டர் உடன்பிறப்புகள்.

உங்கள் சாதனைகளால் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். உங்களின் பயணம் செஸ் ஆர்வலர்களுக்கு மிகவும் உத்வேகம் அளிக்கும். இது தமிழ்நாட்டில் பெண்கள் அதிகாரம் பெற்றதற்கான சான்றாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com