ஒடிசா சென்றுள்ள அமைச்சர்கள் குழு மீட்பு பணி முடியும் வரை தங்கியிருப்பார்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தற்போது வரை அடையாளம் காணப்பட்ட உயிரிழந்தோர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோருள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் உள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
ஒடிசா சென்றுள்ள அமைச்சர்கள் குழு மீட்பு பணி முடியும் வரை தங்கியிருப்பார்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு வருமாறு:-

ஒடிசாவில் ஏற்பட்ட கோர விபத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மனித உயிர்கள் பறிபோயிருக்கும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடியவில்லை.

தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.

தற்போது வரை அடையாளம் காணப்பட்ட உயிரிழந்தோர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோருள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அமைச்சர்கள் தலைமையிலான குழுவினர் மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக சென்னை வந்தடைவதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், இவ்விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் உள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com