கோயம்பேட்டில் இருந்து ஆந்திரா செல்லும் பஸ்கள், மாதவரம் பஸ் நிலையத்துக்குள் நுழைய வேண்டும்: பணீந்திர ரெட்டி

கோயம்பேடு காய்கனி அங்காடி பஸ் நிலையம் வந்து செல்லும் போது மாதவரம் பஸ் நிலையத்தில் உள்ளே சென்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி மாதவரம் பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார்.
கோயம்பேட்டில் இருந்து ஆந்திரா செல்லும் பஸ்கள், மாதவரம் பஸ் நிலையத்துக்குள் நுழைய வேண்டும்: பணீந்திர ரெட்டி
Published on

சென்னை:

சென்னை கோயம்பேட்டில் இருந்து வட சென்னை பகுதிகளுக்கு, தமிழகம் மற்றும் ஆந்திராவின் எல்லையோர பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் மாதவரம் பஸ் நிலையத்திற்குள் நுழையாமல் ஜி.என்.டி. சாலையில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்வதாக புகார்கள் வந்தன. இதனால் பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி மாதவரம் பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது கோயம்பேட்டில் இருந்து செல்லும் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பஸ்கள், திருவள்ளூர் மண்டலத்தின் கீழ் உள்ள பணி மனைகளில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் மாதவரம் பஸ் நிலையத்துக்குள் செல்லாமல் இருப்பதை அறிந்தார்.

இதையடுத்து கோயம்பேட்டில் இருந்து சுண்ணாம்பு குளம், அண்ணாமலை சேரி, தேர்வாய், கல்லூர், பிளேஸ்பாளையம், சத்தியவேடு, புத்தூர், மையூர், முக்கரம்பாக்கம் ஆகிய இடங்களுக்கு செல்லும் தமிழக அரசு பஸ்கள் நாளை (4-ந் தேதி) முதல் கோயம்பேடு காய்கனி அங்காடி பஸ் நிலையம் வந்து செல்லும் போது மாதவரம் பஸ் நிலையத்தில் உள்ளே சென்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com