தக்கலை அருகே ஒரே காம்பில் 9 அன்னாசி பழம்

தக்கலை அருகே தனது தோட்டத்தில் ஒரே காம்பில் 9 அன்னாசி பழங்கள் காய்த்திருப்பதை கண்டு வியந்த லாசர் வேளாண்மை துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார்.
ஒரே காம்பில் 9 அன்னாசி பழம்
ஒரே காம்பில் 9 அன்னாசி பழம்
Published on

தக்கலை:

தக்கலை அருகே வெள்ளிகோடு பகுதியை சேர்ந்தவர் லாசர். இவர் தக்கலையில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஏராளமான அன்னாசி செடிகள் நட்டு பராமரித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இவரது தோட்டத்தில் அன்னாசி பழங்களை பறிக்க சென்றபோது ஒரே காம்பில் 9 பழங்கள் காய்த்து நின்றதை கண்டு வியந்தார். மேலும் இதுகுறித்து வேளாண்மை துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார். அதிகாரிகள் அங்கு சென்று அன்னாசி செடியை பார்வையிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com