மதுரவாயலில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 4 வயது சிறுவன் பலி

சிறுவன் ரக்சன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான்.தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ரக்சன் உயிரிழந்தார்.
மதுரவாயலில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 4 வயது சிறுவன் பலி
Published on

போரூர்:

சென்னை மதுரவாயல், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி சோனியா. இவர்களது மகன் ரக்சன் (வயது4)

சிறுவன் ரக்சன் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். இதையடுத்து அவனது பெற்றோர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு ரத்த பரிசோதனை செய்தபோது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மேல்சிகிச்சைக்காக கடந்த 6-ந்தேதி எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் ரக்சனை சேர்த்தனர். அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ரக்சன் பரிதாபமாக உயிரிழந்தார்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக 4வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com