வேலூர் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ நகை மீட்பு

வேலூர் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ நகைகள் உருக்கிய நிலையில் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நகை கொள்ளைபோன பிரபல நகைக்கடை அருகே இன்று மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தப்பட்டது
நகை கொள்ளைபோன பிரபல நகைக்கடை அருகே இன்று மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தப்பட்டது
Published on

வேலூர்:

வேலூர்-காட்பாடி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையின் சுவரில் துளைபோட்டு மர்மநபர்கள் நகைகளை திருடிச் சென்றனர். 15 கிலோ தங்கநகைகள், அரை கிலோ வைர நகைகள் திருட்டுபோனது. இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொள்ளையனை பிடிக்க 4 டி.எஸ்.பி. தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளிகொண்டா அடுத்த குச்சிபாளையத்தை சேர்ந்த டீக்காராமன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நகைகளை பிரித்து ஆங்காங்கே பதுக்கி வைத்திருந்ததாக கூறினார்.

இதையடுத்து போலீசார் நகைகள் பதுக்கி வைத்த இடத்தை அடையாளம் காட்டும்படி அவரை இன்று அழைத்து சென்றனர். குச்சிபாளையத்தில் உத்தரகாவேரி ஆற்றங்கரையோரம் சுடுகாட்டில் நகைகளை புதைத்து வைத்திருப்பதாக கூறினார். அந்த இடத்தில் போலீசார் தோண்டிபார்த்தபோது அங்கு நகைகள் இருந்தது. 15 கிலோ நகைகள் உருக்கிய நிலையில் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கொள்ளையனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com