சென்னையில் கனமழை- விமான சேவை பாதிப்பு

15 விமானங்கள் தாமதமானதல் பயணிகள் அவதி அடைந்தனர். வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நள்ளிரவில் மழை பெய்தது.
சென்னையில் கனமழை- விமான சேவை பாதிப்பு
Published on

சென்னை:

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் நேற்று முதல் வருகிற 23-ந்தேதி முதல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. ராயப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், மேற்கு மாம்பலம், பெசன்ட் நகர், அடையாறு, மந்தைவெளி, பட்டினப்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, மடிப்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னல் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இதே போல் வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நள்ளிரவில் மழை பெய்தது.

பகல் முழுவதும் வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், நள்ளிரவில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனிடையே சென்னையில் நள்ளிரவில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. 15 விமானங்கள் தாமதமானதல் பயணிகள் அவதி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com