"தமிழகத்தில் இந்த மாதம் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்": இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

குறிப்பாக, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Weather Alert
Published on

தமிழகத்தில் இம்மாதம் வெப்பநிலை வழக்கமான அளவை விட அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழைக்காலம் தீவிரமடைந்து வரும் நிலையிலும், நடப்பு மாதத்தில் ஒட்டுமொத்த மாநிலத்திலும் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் வெயில்:

தமிழகத்தின் ஒட்டுமொத்த சராசரி அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகள், இந்த மாதத்திற்கான இயல்பான அளவை விட அதிகமாகவே பதிவாகக்கூடும். குறிப்பாக, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உள்மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை சற்று குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், இங்கும் இயல்பை விட வெப்பம் கூடுதலாகவே இருக்கும்.

பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்:

பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் மதிய நேரங்களில் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும், போதிய அளவு நீர்ச்சத்து ஆகாரங்களை எடுத்துக் கொள்ளுமாறும் சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com