தமிழகத்தில் தொடர் மின்வெட்டு.. பிரேமலதா கண்டனம்

மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தியது அதன் தீவிரத்தைக் காட்டுகிறது.
பிரேமலதா
பிரேமலதா
Published on

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் முன்வெட்டுகள் நிகழ்வதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்து வரும் சூழலில் விருதாச்சலம் எம்எல்ஏவும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா மற்றும் திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மின்வெட்டு குறித்து பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் சில நாட்களாக அதிக மின்வெட்டு நடக்கிறது. மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தியது அதன் தீவிரத்தைக் காட்டுகிறது.

மின்தடை இல்லாத நிலையை உருவாக்க அரசு உறுதியான செயல்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

அதேநேரம் திமுக அரசில் போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்த சிவசங்கர் இதுகுறித்து பேசுகையில், "சென்னையில் அடிக்கடி மின்தடை என செய்திகள் வருகின்றன. மின்வாரியத்தில் ஊழியர் பற்றாக்குறை, கடன் சுமை என பேசி வருகிறார் அமைச்சர்.

இதே ஊழியர், நிதிப் பற்றாக்குறையுடன்தான் தடையில்லாமல் எங்கள் ஆட்சியில் மின்சாரம் தந்தோம். மின்வாரியத்தை தனியார்களிடம் வழங்கும் ஒன்றிய அரசின் குரலில் பேசுகிறதா தவெக?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com