1 வாக்கு வித்தியாசத்தில் வென்ற தவெக வேட்பாளரை எதிர்த்து பெரியகருப்பன் மனு - உயர்நீதிமன்றம் இன்று விசாரணை

சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
1 வாக்கு வித்தியாசத்தில் வென்ற தவெக வேட்பாளரை எதிர்த்து பெரியகருப்பன் மனு - உயர்நீதிமன்றம் இன்று விசாரணை
Published on

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த திமுக முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், தன்னை தோற்கடித்த தமிழக வெற்றி கழக வேட்பாளர்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் மிழக வெற்றி கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் தோற்றார்.

இந்நிலையில் சீனிவாச சேதுபதி, சட்டமன்றத்தில் மே 13 நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பதைத் தடுக்கக் கோரி பெரியகருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

பதிவான வாக்குகள் முறையாக மறு எண்ணிக்கை செய்யப்படவில்லை என அவர் தரப்பு தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் எல். விக்டோரியா கௌரி மற்றும் என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த ரிட் மனுவை இன்று (மே 10) நடைபெறும் சிறப்பு அமர்வில் அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com