50 வருசமா ஒரே டெக்னிக்கா? டெக்னாலஜி மாறிவிட்டது! டெக்னிக்கையாவது மாற்றிக்கொள்ளுங்கள்- முதலமைச்சர் விஜய்

மக்கள் தவெகவிற்கு வாக்களித்தது தவறு என்றும், குடும்பம் குடும்பமாக ஆதரித்தது தவறு என்றும் தொடர்ந்து மக்களை திமுகவினர் சாடிவருகின்றனர்.
CM vijay
Published on

சட்டமன்ற அவையில் தவெக மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே "டாஸ்மாக் பார்ட்டி ஃபண்ட்" உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களால் அனல் பறக்கும் விவாதங்களும் அமளிகளும் ஏற்பட்டன. இந்நிலையில் முதலமைச்சர் விஜய் தொடர்ந்து தனது பேச்சை தொடர்ந்தார்.

அவர் பேசியது:-

முதல்வருக்கு பேசத் தெரியவில்லை, பதிலளிக்கத்தெரியவில்லை என்று கூறுபவர்கள், பதிலளிக்கும் போது அதனைக் கேட்காமல் வெளியேறிவிடுகின்றனர்.

மக்களுக்கு தேவையான பயன்படக்கூடிய ஆக்கப்பூர்வமான கருத்துகளையோ, ஆக்கப்பூர்வமான யோசனைகளோ இருந்தால் பேசுங்கள். அதனை தவெக அரசு கண்டிப்பாக ஏற்கும். அதையெல்லாம் விட்டுவிட்டு நக்கல், நையாண்டி, மற்றும் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் ஏதேதோ பேசுவதையெல்லாம் விட்டுவிடுங்கள்.

தவெகவைப் பற்றி அவதூறு பரப்புவதை மட்டுமல்லாமல் மக்கள் மேலும் அவதூறு பரப்பத்தொடங்கிவிட்டனர். மக்கள் தவெகவிற்கு வாக்களித்தது தவறு என்றும், குடும்பம் குடும்பமாக ஆதரித்தது தவறு என்றும் திமுகவினர் தொடர்ந்து மக்களை சாடிவருகின்றனர்.

இது இப்பொது மட்டுமால்லாமல், அன்றய எம்ஜிஆர்-ஐயும் இதேபோன்று தான் அவர் வெற்றி பெற்ற போதும் மக்களை தப்பு தப்பாக பேசுவதும் எம்ஜிஆர் என்ன செய்துவிட்டார் என்றும் திமுகவினர் 50 வருடமாக ஒரே டெக்னிக்காக விமர்சித்து வருகின்றனர். டெக்னாலஜி எல்லாம் மாறிவிட்டது. டெக்னிக்கயாவது மாற்றிக்கொள்ளுங்கள் என்று முதுலமைச்சர் விஜய் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com