ரேஷன் கடைகளில் கருப்பட்டி வழங்ககோரி தமிழ்நாடு நாடார் பேரவை ஆர்ப்பாட்டம்

தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் நாடார் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ரேஷன் கடைகளில் கருப்பட்டி வழங்ககோரி தமிழ்நாடு நாடார் பேரவை ஆர்ப்பாட்டம்
Published on

ராமநாதபுரம்:

ரேஷன் கடைகளில் மாதந்தோறும் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்ககோரி தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில பொருளாளர் துறையூர் பெ.பிரபாகரன், வர்த்தக அணித் தலைவர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார், அவைத்தலைவர் அற்புதம், தமிழ்நாடு நாடார் பேரவை பொருளாளர் எஸ்.சதாசிவம், துணை பொதுச் செயலாளர் கே.வெற்றிராஜன், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், மாநில துணைத் தலைவர்கள் கரூர் லோகநாதன், என்.அன்புகிருஷ்ணன், மதுரை மாநகர செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் எஸ்.எம்.தாளைக்கண்ணன், மாநில மகளிர் அணி துணைத்தலைவி விக்டோரியா, கவிதா காந்தி, மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சங்கரன், சிவகங்கை மாவட்டத் தலைவர் ஜேசுபாஸ்கர், சமூக ஆர்வலர் ராணி, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com