TN Assembly | தமிழக சட்டப்பேரைவ கூட்டத் தொடர் நாளை கூடுகிறது

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பார்ள்.
TN Assembly | தமிழக சட்டப்பேரைவ கூட்டத் தொடர் நாளை கூடுகிறது
Published on

தமிழகத்தில் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நாளை (மே 11) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிதாக தேர்வாகி இருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள்.

இது தொடர்பாக முதன்மை செயலாளர் சீனுவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் நாளை (மே11) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அன்று புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பார்ள்.

தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழுடன் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பேரவை உறுப்பினர்களாக பதவியேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புதிதாக தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேரவை உறுப்பினர்களுக்கு தற்காலிக பேரவை தலைவர் கருப்பையா பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

மேலும், பேரவை தலைவர் மற்றும் துணை தலைவருக்கான தேர்தல் நாளை மறுநாள் (மே 122) காலை 9.30 மணிக்கு நடைபெறும். இதைத் தொடர்ந்து பெரும்பான்மையை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பும் நடத்தப்படும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று பதவியேற்றார். அவருக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

விஜய்யுடன் அவரது கட்சியினர் ஒன்பது பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் விழா மேடையிலேயே முதலமைச்சர் விஜய் த.வெ.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த வாக்குறுதிகளில் 2 மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களின் பாதுகாப்புக்கு சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படை, போதை பொருள் தொடர்பான குற்றங்களை தடுக்க மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களில் 65 போதை பொருட்கள் தடுப்பு படைகள் அடங்கிய மூன்று திட்டங்களை நிறைவேற்றும் கோப்புகளில் கையெழுத்திட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com