

தமிழ்நாட்டில் த.வெ.க அரசு புதிதாக பதவி ஏற்றதை தொடர்ந்து, நேற்று 14 மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து இன்று 5 மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள்,
சென்னை - மாலதி ஹெலன்,
ராமநாதபுரம் - சிவகுரு பிரபாகரன்,
திருவள்ளூர் - கவிதா,
பெரம்பலூர் - சரண்யா அரி,
அரியலூர் - மிருணாளினி,
உள்ளிட்ட ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளை குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு தமிழக அரசு பணிநியமனம் செய்துள்ளது.