பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

தமிழ்நாட்டு மக்கள் பிரதமர் மோடியின் இதயத்தில் வாழ்கிறார்கள்.பிரதமரின் தலைமையில் நாடும், மக்களும் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து
Published on

நரேந்திர மோடி இன்று 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக மக்கள் சார்பில் வாழ்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து ராஜ் பவன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டின் மகிழ்ச்சிகரமான சகோதர, சகோதரிகள் தங்களின் அன்புத் தலைவரும் பிரதமருமான நரேந்திர மோடிக்கு மனமார்ந்த, அன்பான மற்றும் சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வறுமையற்ற, பிணியில்லாத, கல்வியறிவின்மை போக்க, வீடற்றவர்கள் நிலை மாற மற்றும் பாகுபாடுகள் இல்லாத வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்புவதற்காக நரேந்திர மோடி தனது 3வது ஆட்சிப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

பிரதமருக்கு நாடு முழுவதும் ஒரே குடும்பம் என்பதும், தமிழ்நாட்டு மக்கள் அவரது இதயத்தில் வாழ்கிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். தமிழ் மக்கள் அவரை நேசிக்கிறார்கள்.

தங்களின் இதயத்தில் பிரதமர் வாழ்கிறார் என்பதை அவர் அறிய வேண்டும் என விரும்புகிறார்கள். பிரதமரின் தலைமையில் நாடும், மக்களும் மிகவும் பாதுகாப்பாக இருப்பதை அவர்கள் அறிவார்கள்.

கடவுள் அவருக்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளைக் கொடுத்து, தேசத்தின் நலனுக்கான அவரது அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை வழங்கட்டும்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com