தமிழ்நாடு இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
Published on

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தத் தேர்தலில் மொத்தம் 4,051 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

சுமார் 7,500-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

வேட்புமனு பரிசீலனைக்குப் பிறகு, 500-க்கும் மேற்பட்டோர் தங்களது மனுக்களைத் திரும்பப் பெற்றனர். தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே.4ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதற்கு முன்னதாக 2021 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் மொத்தம் 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com