Tamil Nadu Election Results | எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை

எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
Tamil Nadu Election Results | எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை
Published on

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தொகுதி முன்னிலை நிலவரத்தின்படி தவெக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. அதிமுக 2வது இடத்திலும் திமுக 3வது இடத்திலும் உள்ளது.

பெரம்பூர், திருச்சி கிழக்கில் த.வெ.க. தலைவர் விஜய் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

4வது சுற்றிலும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைந்துள்ளார்.

காலை 10.30 மணி நிலவரப்படி 234 தொகுதிகளில் த.வெ.க. 102, அ.தி.மு.க. கூட்டணி 81, தி.மு.க.கூட்டணி 51 ஆகிய இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. இதுவரை எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com