

தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து, தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்கு உள்ளாகவே மிகச் சரியாகத் தலைமைச் செயலகத்திற்குப் பணிக்கு வந்துவிடுகிறார்.
முதலமைச்சரின் இந்த அதிரடிப் பஞ்சுவாலிட்டியைப் பார்த்து வியந்த தலைமைச் செயலக உயர் அதிகாரிகள் மற்றும் துறைச் செயலாளர்கள் தாங்களும் இதை பின்பற்ற வேண்டும் என்று நினைத்தும், தங்களின் கீழ் உள்ள ஊழியர்களுக்கும் இதே ஒழுக்கத்தைக் கொண்டு வர வேண்டும் என விரும்பினர்.
இதன் காரணமாக, கடந்த சில நாட்களாக தலைமைச் செயலக அதிகாரிகள் தங்களின் துறை ஊழியர்களுக்கு இந்த வருகை நேர உத்தரவைப் பிறப்பித்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் 40-க்கும் மேற்பட்ட துறைகளில் சுமார் 5,500 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். முதலமைச்சர் விஜய்யின் நேர மேலாண்மை மற்றும் எளிமையைப் பின்பற்றி, அனைத்து ஊழியர்களும் காலை 10 மணிக்குள் தங்களின் இருக்கைக்கு வருவதை அதிகாரிகள் தற்போது கட்டாயமாக்கியுள்ளனர்.
தலைமைச் செயலகப் பணியாளர்களுக்கு காலை 10 மணிக்குத் தொடங்கும் பணி நேரம், மாலை 5.45 மணிக்கு நிறைவடையும். அதிகபட்சமாக காலை 10.10 மணி வரை மட்டுமே தாமதமாக வர அனுமதிக்கப்படுவார்கள்.
அதற்கு மேல் தாமதித்தால், வருகைப் பதிவேடு மூடப்பட்டு ஆப்சென்ட் அல்லது விடுப்பு வெட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உத்தரவை விடுத்துள்ளனர்.