Producer Council | அன்புடன் வரவேற்றார், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார் - தயாரிப்பாளர் சங்கம்

கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
Producer Council | அன்புடன் வரவேற்றார், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார் - தயாரிப்பாளர் சங்கம்
Published on

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும், திரைத்துறை சார்ந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் விஜயிடம் வழங்கினர்.

முதலமைச்சர் விஜயுடன் சந்திப்பு முடிந்து செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், "எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா வரிசையில் திரைத்துறையில் இருந்து முதலமைச்சராக பொறுப்பேள்ளார் விஜய்.

அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தோம். எங்களை அன்புடன் வரவேற்று எங்கள் கோரிக்கைகளை கேட்டறிந்தார். மேலும், எங்கள் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றுவதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

திரைத்துறையில் உள்ள சிக்கல்கள் முதலமைச்சருக்கும் தெரியும் என்பதால் விரைவில் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம். நாங்கள் கொடுத்த மனுவை படித்து பார்த்து கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்," என தெரிவித்தனர்.

இதேபோல் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளும் முதல்மைச்சரை நேரில் சந்தித்து, பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com