இது தீர்வல்ல - வேண்டாமே இந்த விபரீத முடிவு...

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு பொதுநல இயக்கங்கள் தற்கொலை எதிர்ப்பு பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது.
இது தீர்வல்ல - வேண்டாமே இந்த விபரீத முடிவு...
Published on

சென்னை:

தினமும் தற்கொலை செய்திகள் இல்லாத நாளிதழ்களே இல்லை எனக் கூறும் அளவுக்கு அற்ப காரணங்களுக்காக எல்லாம் தற்கொலை நிகழ்வுகள் அசாதாரணமாகி விட்டது.

தனிமை, புறக்கணிப்பு, பயம், கவலை, வறுமை, குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, விரக்தி போன்றவையே தற்கொலை செய்துகொள்வதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன.

மேலும், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு புது வகையான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டாலும் மோசடிக்காரர்கள் தினமும் புதுவித யுக்திகளைப் பயன்படுத்தி மக்களிடம் மோசடியில் ஈடுபட்டு அவர்களை தற்கொலைக்கு தூண்டுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, பல்வேறு பொதுநல இயக்கங்கள் தற்கொலை எதிர்ப்பு பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது.

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள அறிக்கையின் படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில், 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

தற்கொலை எண்ணம் எழுவதைத் தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். சமூக ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

உண்மையான காரணங்களைக் கண்டறிந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். அதற்கு தற்கொலை தடுப்பு ஆலோசனை மையங்கள் தேவை.

எனவே, அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்தால் தற்கொலை பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என்பதே நம்பிக்கையாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com