

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் மே 31 வரை கோடை விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏப்.25 வரை ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும். கோடை விடுமுறைக்கு பின் ஜூன்1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ளது. பள்ளிகள் வாக்குச்சாவடி மையங்களாகப் பயன்படுத்தப்பட உள்ளதால், தேர்தல் பணிகளுக்காகத் தேர்வுகளை முன்கூட்டியே முடித்து விடுமுறை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
விடுமுறை தொடங்குவதற்கு முன்னதாக, அனைத்து வகுப்புகளுக்கும் முழு ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் நிறைவடையும்.