தவறான சிகிச்சையால் மாணவி உயிரிழப்பு: திருச்சி அரசு மருத்துவமனையில் வெடித்த போராட்டம்- அமைச்சர் ரமேஷ் பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுட்டுள்ள செவிலியர் மாணவிகளிடம் அமைச்சர் ரமேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தவறான சிகிச்சையால் மாணவி உயிரிழப்பு: திருச்சி அரசு மருத்துவமனையில் வெடித்த போராட்டம்- அமைச்சர் ரமேஷ் பேச்சுவார்த்தை
Published on

திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள செவிலியர் மாணவிகளுடன் அமைச்சர் ரமேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

திருச்சி அரசு மருத்துவ மருத்துவமனையில் புதுக்கோட்டைய சேர்ந்த பயிற்சி செவிலிய மாணவி சீதாலட்சுமி, மூக்கு வலி என அனுமதிக்கப்பட்ட நிலையில், தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி செவிலியர்கள் காலை முதலே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சக மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுட்டுள்ள செவிலியர் மாணவிகளிடம் அமைச்சர் ரமேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, செவிலிய மாணவி மரணம் தொடர்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் ரமேஷ் செவிலிய மாணவிகளிடம் உறுதி அளித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com