‘குழந்தைகளை பயன்படுத்தி வீடியோக்கள் உருவாக்குவதை நிறுத்த வேண்டும்’ - விஜய்மீது பாய்ந்த புதிய புகார்

விஜய்க்கு தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
‘குழந்தைகளை பயன்படுத்தி வீடியோக்கள் உருவாக்குவதை நிறுத்த வேண்டும்’ - விஜய்மீது பாய்ந்த புதிய புகார்
Published on

அரசியல் பிரசாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்தியதற்காக தவெக தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம், தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலின் தனது கடைசி பிரசாரத்தின் போது, குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் என்று விஜய் பேசியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து இணையத்தில், குழந்தைகள் அழுது தங்கள் பெற்றோர்களை விஜய்க்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தும் வீடியோக்கள் வெளியாகின. இந்நிலையில் குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் இந்த புகாரை தெரிவித்துள்ளது.

நடிகர் விஜய்க்கும் கண்டன கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் குழந்தைகளை அரசியலுக்குப் பயன்படுத்துவது தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறுவதாகும் என்றும், இது குழந்தைகளின் உரிமைகளைப் பாதிக்கும் செயல் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், விஜய் பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளை பயன்படுத்தி வீடியோக்கள் உருவாக்குவதை விஜய் நிறுத்த வேண்டும்; உணர்ச்சிரீதியான மிரட்டல் வீடியோக்கள், யூடியூப் சார்ட்ஸ் பகிர்வதை தவிர்க்க வேண்டும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com