திருச்சி கிழக்கில் போட்டியா?- மு.க.ஸ்டாலின் பதில்

கொளத்தூர் தொகுதியில் தோல்வியை சந்தித்ததால் சட்டசபைக்கு வரமுடியாத நிலையில் உள்ளார் மு.க.ஸ்டாலின்.
Stalin
Published on

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தார்.

திருச்சி கிழக்கில் முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததை அடுத்து, வருகின்ற இடைத்தேர்தலில் திமுக சார்பாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது.

கொளத்தூர் தொகுதியில் தோல்வியை சந்தித்ததால் சட்டசபைக்கு வரமுடியாத நிலையில் உள்ளார், ஆனால் விரைவில் மு.க.ஸ்டாலின் சட்டசபைக்கு வருவார் என்று கே.என்.நேரு கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது, இதுகுறித்து மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

அவர் கூறியதாவது, திருச்சி கிழக்கில் போட்டியிடுவது குறித்து தற்போது வரை முடிவு எடுக்கவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com