தோல்விக்கு காரணத்தை தேடுகிறார்..! திமுக தொண்டர்கள் கூறுவது கேட்கவில்லையா ஸ்டாலின் சார்? - முதலமைச்சர் விஜய்

ரீல்ஸ் போட்ட கூட்டம் தான் இன்று தவெக ஆட்சி அமைத்தர் பின்னர் செய்தி பார்க்கிறார்கள்.
தோல்விக்கு காரணத்தை தேடுகிறார்..! திமுக தொண்டர்கள் கூறுவது கேட்கவில்லையா ஸ்டாலின் சார்? - முதலமைச்சர் விஜய்
Published on

திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் நன்றி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திமுகவின் தோல்விக்கு காரணம் தேடுகிறார் ஸ்டாலின், உங்கள் குடும்பம் தான் காரணம் என தொண்டர்கள் கூறுவது கேட்கவில்லையா?

திமுக நடத்தும் குடும்ப அரசியல் தான் தோல்விக்கு காரணம் என ஒவ்வொரு திமுக தொண்டரும் கூறுகிறார்கள்.

வீதிக்கு வீதி போதைப்பொருள் கலாச்சாரத்தை வளர்த்துவிட்ட திமுக இன்று எங்களை குறைகூறுவதா?

போதைப்பொருள் கலாச்சாரத்தால் வன்முறை அதிகரித்தால் அதற்கு எங்கள் மீது பழி போடுவதா?

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com