நலிவடைந்த மின்சாரத்துறையை காப்பாற்றியவர் ஸ்டாலின்... வருவாய் பற்றாக்குறையை திமுக அரசு கணிசமாக குறைத்தது - செந்தில் பாலாஜி!

2021ல் திமுக ஆட்சிக்கு வரும் போதே மின் வாரியத்தில் ரூ.1.59 லட்சம் கோடி கடன் இருந்தது.
நலிவடைந்த மின்சாரத்துறையை காப்பாற்றியவர் ஸ்டாலின்... வருவாய் பற்றாக்குறையை திமுக அரசு கணிசமாக குறைத்தது - செந்தில் பாலாஜி!
Published on

தமிழ்நாட்டின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையைத் தொடர்ந்து, இன்று மின்சாரத்துறைக்கான வெள்ளை அறிக்கையை தவெக அரசு வெளியிட்டது. இந்த வெள்ளை அறிக்கை தொடர்பாக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.,

“மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் நிதிகளை மின்துறைக்கு வழங்காவிடில், பல்வேறு இன்னல்களை துறை சந்தித்திருக்கும். ஒவ்வொரு ஆண்டும் மின்தேவை அதிகரிக்கும். அதுபோல கடந்த 5 ஆண்டுகளும் அதிகரித்தது.

அப்போதும் மின்தடை இல்லாமல் சீராக மின்சாரத்தை வழங்கியது அரசு திராவிட அரசு. முந்தைய அதிமுக ஆட்சியில் 3 முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. 3 முறை உயர்த்தியும் அதிமுக ஆட்சியில் வருவாய் இழப்பு என்பது 58,534 கோடியாக இருந்துள்ளது.

ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் வருவாய் 1,77, 856 கோடியாக உயர்ந்தது. வருவாய் பற்றாக்குறை 34,447 ஆயிரம் கோடியாக உள்ளது. அதிமுக ஆட்சியைவிட வருவாய் பற்றாக்குறை 20 ஆயிரம் கோடி குறைத்துள்ளோம்.

கடந்த 5 ஆண்டுகளில் மின்சாரத் துறையில் வருவாய் பற்றாக்குறையை கணிசமாக திமுக அரசு குறைத்திருக்கிறது. மின்நுகர்வுகள் அதிகரிக்க அதிகரிக்க, உற்பத்தி, கொள்முதலை அதிகரிக்க வேண்டும். உற்பத்தியை அதிகரிக்கும்போது செலவு அதிகரிக்கும். செலவினங்களை குறைக்க வெளிசந்தைகளில் மின்சாரம் வாங்கினால் அதற்கான செலவுகளும் கூடும்.

இதையும் வெள்ளை அறிக்கையினில் வெளியிட்டிருந்தால் நன்றாக இருக்கும். வருமானத்திற்கான வழிகள், செலவினத்திற்கான வழிகளையும் அதில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

2021ல் திமுக ஆட்சிக்கு வரும் போதே மின் வாரியத்தில் ரூ.1.59 லட்சம் கோடி கடன் இருந்தது. அப்போது 5 வருடத்திற்கான இந்தத் தொகையின் வட்டியையும் கணக்கில்கொள்ள வேண்டும். அதை ஏன் சொல்லவில்லை? நிதி நிலைமை அறிக்கையில் எவ்வளவு வட்டி கட்டினோம் என்பதை சொன்னவர்கள், இதில் சொல்லவில்லை.

அதிமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்காக ஆண்டுக்கு ரூ.75ஆயிரம் கோடி வட்டி கட்டியுள்ளோம். வருவாய் அதிகரிப்பு என்பது மின்கட்டண உயர்வால் மட்டும் வருவது அல்ல, மின்சாரத்துறையின் நடவடிக்கைகளும் காரணமாகும்.

மின்சாரம் அதிக விலை கொடுத்து வாங்கப்படவில்லை என வெள்ளை அறிக்கையில் தெரியவந்துள்ளது. கோடைக்காலமான 3 மாதங்கள்தான் மின்சார தேவை மிக அதிகமாக இருக்கும்; அதற்கு குறுகிய கால ஒப்பந்தங்கள்தான் சரி, நீண்ட கால ஒப்பந்தம் செய்வோம் என அமைச்சர் கூறியது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com