ராமேஸ்வரம் மீனவர்கள் நால்வரை கைது செய்த இலங்கை கடற்படை

இன்று (ஏப்ரல் 14) முதல் ராமேஸ்வரம் கடற்பகுதியில் விசை படகில் மீன் பிடிக்க மீன் பிடித் தடை காலம் துவங்கியுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் நால்வரை கைது செய்த இலங்கை கடற்படை
Published on

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்துள்ளது.

மன்னார் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டுள்ள 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஜேசுராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

முன்னதாக கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதியும் எல்லை தாண்டி மீன்பிடித்தாக ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இன்று (ஏப்ரல் 14) முதல் ராமேஸ்வரம் கடற்பகுதியில் விசை படகில் மீன் பிடிக்க மீன் பிடித் தடை காலம் துவங்கியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com