தைப்பூசத்தை ஒட்டி பழனிக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு

மதுரை - பழனி இடையே முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் காலை 6.00 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு அதே நாளில் காலை 8.30 மணிக்கு பழனி வந்தடையும்.
தைப்பூசத்தை ஒட்டி பழனிக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
Published on

பிப்ரவரி 1 அன்று பழனியில் தைப்பூச விழாவையொட்டி மதுரை சந்திப்புக்கும் பழனிக்கும் இடையே முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

ரெயில் எண் 06145: மதுரை சந்திப்பு - பழனி முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரெயில் 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 06.00 மணிக்கு மதுரை சந்திப்பிலிருந்து புறப்பட்டு அதே நாளில் காலை 08.30 மணிக்கு பழனியை வந்தடையும்.

மறுமார்க்கமாக ரெயில் எண். 06146: பழனி - மதுரை சந்திப்பு முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரெயில் 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பிற்பகல் 2.25 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு அதே நாளில் மாலை 5.00 மணிக்கு மதுரை சந்திப்பை வந்தடையும்.

இந்த ரெயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com