கோடை விடுமுறையையொட்டி மங்களூரில் இருந்து சென்னைக்கு 4-ந்தேதி முதல் சிறப்பு ரெயில்

மங்களூரு-சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் மே 4-ந் தேதி முதல் ‌ஜூன் 8-ந் தேதி வரை திங்கட்கிழமை தோறும் மாலை 4 மணிக்கு புறப்படுகிறது.
கோடை விடுமுறையையொட்டி மங்களூரில் இருந்து சென்னைக்கு 4-ந்தேதி முதல் சிறப்பு ரெயில்
Published on

சேலம்:

சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் கோடை விடுமுறையில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி மங்களூரு-சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் மே 4-ந் தேதி முதல் ‌ஜூன் 8-ந் தேதி வரை திங்கட்கிழமை தோறும் மாலை 4 மணிக்கு புறப்படுகிறது.

இந்த ரெயில் கேரள மாநிலம் காசர் கோடு, கஞ்சன்காடு, பையனூர், கன்னூர், தலச்சேரி, வடகரா, கோழிக்கோடு, சொரனூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் வழியாக மறுநாள் காலை 10.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். இந்த ரெயில் ஈரோட்டிற்கு அதிகாலை 2.10 மணிக்கும், சேலம் ஜங்சனுக்கு 3.17 மணிக்கும் வந்து செல்லும்.

இதே போல மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர்-மங்களுரு சிறப்பு வார ரெயில் மே 5-ந்தேதி முதல் ஜூன் 9-ந் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மறுநாளான புதன்கிழமை காலை 7 மணிக்கு மங்களூரு சென்றடையும். சேலம் சந்திப்புக்கு இரவு 7.35-க்கும், ஈரோட்டிற்கு 8.35-க்கும் வந்து செல்லும் எனவும் இந்த ரெயிலை ரெயில் பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com