உதகை அருகே மண் சரிந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு

கட்டுமான பணியின்போது திடீரென மண் சரிந்து விழுந்தது.மண் சரிவில் சிக்கி 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உதகை அருகே மண் சரிந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு
Published on

உதகை:

நீலகிரி மாவட்டம் உதகை அருகே லவ்டேல் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. கட்டுமான பணியின்போது திடீரென மண் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் சிக்கிக்கொண்டனர்.

அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மண் சரிவில் சிக்கி 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 5 பேர் பெண் தொழிலாளிகள் ஆவர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு தொழிலாளி இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக்கொண்டார். அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com