13-ம் ஆண்டு நினைவு நாள்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மலர் அஞ்சலி

அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரளாக வந்து டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.
13-ம் ஆண்டு நினைவு நாள்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மலர் அஞ்சலி
Published on

பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் ‘தினத்தந்தி’ அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.

அவரது 13-ம் ஆண்டு நினைவு நாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடை பிடிக்கப்பட்டது.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு 13-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் கல்வி, பத்திரிகை, விளையாட்டு, ஆன்மீகம் மற்றும் சமூக சேவைகளைப் போற்றும் வகையில் அனைவரும் முதலில் தலை தாழ்த்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் அங்குள்ள நினைவு பீடத்தில் தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர்கள் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன் மற்றும் அனிதா குமரன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

தினத்தந்தி, மாலைமலர், தந்தி டிவி., டி.டி. நெக்ஸ்ட், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., சுபஸ்ரீ, கோகுலம் கதிர், இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டிவி. பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரளாக வந்து டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com