அமைச்சர்களாக பதவியேற்ற ஷாஜகான், வன்னிஅரசுக்கு இலாக்கா ஒதுக்கீடு

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஷாஜகான் , விசிகவின் வன்னி அரசு அமைச்சர்களாக பதவியேற்றனர்.
அமைச்சர்களாக பதவியேற்ற ஷாஜகான், வன்னிஅரசுக்கு இலாக்கா ஒதுக்கீடு
Published on

ர்தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. நேற்று 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். முதலமைச்சருடன் சேர்த்து 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர். சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கையில் 15 சதவீதம் வரை அமைச்சர்கள் எண்ணிக்கையை உயர்த்த முடியும். அதன்படி முதலமைச்சர் உள்பட 35 அமைச்சர்கள் பணியாற்றலாம். தற்போது மொத்தம் 33 அமைச்சர்களே பதவி ஏற்றிருப்பதால், கூடுதலாக 2 அமைச்சர்களை சேர்க்க வழிவகை உள்ளது. அந்த இடங்களில் தலா ஒரு இடம் விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஷாஜகான் , விசிகவின் வன்னி அரசு அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் பதவி ஏற்பு பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அமைச்சர் ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் வன்னிஅரசுக்கு ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ்  பழங்குடியினர் நலத்துறை  என்கிற சமூக நீதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது 

X

Maalai Malar
www.maalaimalar.com