த.வெ.க எம்.எல்.ஏ.-க்களிடம் பேரம் பேசிய விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு..!- காவல்துறை

தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
DMK Ex Minister Senthil balaji
Published on

தவெக எம்எல்ஏக்கள் 10-12 பேரிடம் கட்சி மாறுவதற்கு திமுக ஆதரவாளர்கள் பேரம் பேசியதாக விசாணையில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியுள்ளனர்.

யூடியூபர் திருநாவுக்கரசு ரூ.35 கோடி பேரம் பேசியதாக தவெக எம்எல்ஏ இளையராஜா காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

எனக்கு விருப்பமில்லை, என்னிடம் இனிமேல் பேசாதீர்கள் என்று கண்டிப்புடன் இளையராஜா கூறியதால் பேரம் குறித்து வெளியில் கூறினால் இளையராஜா, குடும்ப உறுப்பினர்கள் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என திருநாவுக்கரசு மிரட்டல் விடுத்துள்ளார்.

கைது செய்யப்பட்டர்களை செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐபிடிஎஸ் கருத்து கணிப்பு அமைப்பை சேர்ந்த திருநாவுக்கரசு, அவருக்கு பின்னணியாக செயல்பட்டதாக நரேஷ், தியாகராஜன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அறிவுரையின் பேரிலேயே திருநாவுக்கரசு இளையராஜாவை தொடர்புகொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com