மருத்துவமனையில் ஜி.கே.மணியை சந்தித்து நலம் விசாரித்த செல்வப்பெருந்தகை

ஜி.கே.மணி திடீர் உடல் நலக்குறைவால் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஜி.கே.மணியை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த செல்வப்பெருந்தகை அவருக்கு ஆறுதல் கூறினார்.
மருத்துவமனையில் ஜி.கே.மணியை சந்தித்து நலம் விசாரித்த செல்வப்பெருந்தகை
Published on

பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கும், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்த சூழலில், அன்புமணி ராமதாஸ் மாவட்டந்தோறும் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று கட்சி பணிகளை தீவிரப்படுத்த நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.

பா.ம.க. கவுரவ தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.கே.மணி திடீர் உடல் நலக்குறைவால் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணியை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவருக்கு ஆறுதல் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com