சிவனும் முருகனும் சைவ கடவுளா? இந்து கடவுளா? - சீமான் கேள்வி

வழிபாடு செய்யும் தெய்வத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது.தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் என் சொந்தம்.
சிவனும் முருகனும் சைவ கடவுளா? இந்து கடவுளா? - சீமான் கேள்வி
Published on

திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முருகன் சைவக் கடவுளா, இந்து கடவுளா. முருகன் என் ரத்தம், என் இன கடவுள்.

சிவனும் முருகனும் இந்து கடவுளா என என்னுடன் விவாரம் செய்யத் தயாரா?

அயோத்தியில் ராமர் கோவில் பிரச்சனை தற்போது தீர்ந்துவிட்டதால் தமிழ்நாட்டில் முருகனை வைத்து அரசியல் செய்கின்றனர்.

முருகனை கும்பிட வேண்டாம் என யாராவது உங்களை எதிர்த்தார்களா? எதை வைத்து அரசியல் செய்வது என தெரிய வேண்டாமா?

வழிபாடு செய்யும் தெய்வத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்றும் விவகாரத்தை வைத்து திட்டமிட்டு பிரச்சனை உருவாக்குகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் என் சொந்தம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com