சென்னை தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவராக சிவானந்த தாமோதர பை பதவியேற்பு

தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் (RMC) புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
சென்னை தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவராக சிவானந்த தாமோதர பை பதவியேற்பு
Published on

சென்னையில் உள்ள தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக விஞ்ஞானி சிவானந்த தாமோதர பை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

1992ம் ஆண்டு வானிலை ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாக சேர்ந்த இவர் சுமார் 34 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் (RMC) புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த ஒரு வருடமாக தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த விஞ்ஞானி அமுதா அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதிய தலைவராக விஞ்ஞானி சிவானந்த தாமோதர பை இன்று பொறுப்பேற்றார்.

தென் மண்டலத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள சிவானந்த தாமோதர பை, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் வானிலை முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மைப் பணிகளை இனி ஒருங்கிணைப்பார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com