தமிழ்நாடு பள்ளி பாடத்திட்டம் மாற்றியமைப்பு - மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய நிபுணர் குழு நியமனம்!

கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு கலைக்கப்பட்டு, புதிய குழு நியமனம்.
தமிழ்நாடு பள்ளி பாடத்திட்டம் மாற்றியமைப்பு - மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய நிபுணர் குழு நியமனம்!
Published on

தமிழ்நாடுப் பள்ளிக்கல்வித் துறையின் பாடத்திட்டங்களை முழுமையாக மறுவடிவமைப்பு செய்வதற்காக, இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் 17 உறுப்பினர்களைக் கொண்ட புதிய நிபுணர் குழுவை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.

4 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான பள்ளிப் பாடத்திட்டங்களை தற்போதைய குழு நிர்ணயிக்கும். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டிருந்த பாடத்திட்ட வடிவமைப்பு நிபுணர் குழுவைக் கலைத்துவிட்டு, இந்த புதிய குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

புதிய கல்வித் தேவைகளுக்கு ஏற்ப பாடத்திட்டங்களை வழங்குவதற்காக குழு மாற்றியமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com