சத்துவாச்சாரி, சைதாப்பேட்டை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
power cut
மின்நிறுத்தம்
Published on

வேலூர் மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த சத்துவாச்சாரி துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய மின்பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

மின்தடை

இதனால் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் பராமரிப்பு பணிகள் தொடங்கும். எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் சத்துவாச்சாரி பகுதி-1 முதல் 5 வரை, அன்புநகர், ஸ்ரீராம்நகர், வள்ளலார், டபுள் ரோடு, ரங்காபுரம், அலமேலுரங்காபுரம், சைதாப்பேட்டை, சி.எம்.சி. காலனி, எல்.ஐ.சி. காலனி, காகிதப்பட்டறை, இ.பி. நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை வேலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எஸ்.ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com