

மேட்டூர்:
மேட்டூர் அணையின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும், பல மாவட்ட பொதுமக்களின் குடிநீருக்காவும் தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு குறைந்த அளவே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அதன்படி இன்று விநாடிக்கு 741 கனஅடி தண்ணீர் அணைக்கு வருகிறது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து காவிரி ஆற்றில் 750 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தண்ணீர் வரத்தைவிட மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 108.36 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிஅளவில் 108.34 அடியாக சரிந்தது.