தேர்தல் வாக்குப்பதிவு நாளில் சாதாரண பஸ்களில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்- சேலம் கலெக்டர் அறிவிப்பு

அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தேர்தல் வாக்குப்பதிவு நாளில் சாதாரண பஸ்களில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்- சேலம் கலெக்டர் அறிவிப்பு
Published on

சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளதாவது:-

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நாளான 23-ந்தேதிஅன்று 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், கண்பார்வை குறைபாடுய மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் தினத்தன்று மட்டும் ஆதார் அட்டை, வாக்காளர் பூத் சீலிப் அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை காண்பித்து சாதாரண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறும், அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com