செங்கல்பட்டு மாவட்ட கடலோர பகுதிகளில் 'சாகர் கவாச்-2025' கடலோர பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது

இந்த ஆண்டுக்கான இரண்டு நாள் 'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை தொடங்கியது. கோவளம் கடற்கரை, மாமல்லபுரம் கடற்கரை கோவில், கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட கடலோர பகுதிகளில் 'சாகர் கவாச்-2025' கடலோர பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது
Published on

மாமல்லபுரம்:

கடந்த 2008-ம் ஆண்டு கடல்வழியாக மும்பையில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து, கடலோர பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் 'சாகர் கவாச்' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

இதில், கடலோர காவல்படை வீரர்களே பயங்கரவாதிகள் போன்று மாறுவேடத்தில் டம்மி வெடிகுண்டு, துப்பாக்கியுடன் தமிழக கடற்பகுதிகளில் நுழைவார்கள். அவர்களை, பாதுகாப்பு படையினர் பல குழுக்களாகப் பிரிந்து தடுத்து, தாக்குதல் நடைபெறுவதை முறியடிப்பார்கள்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான இரண்டு நாள் 'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் போலீசார் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.

கோவளம் கடற்கரை, மாமல்லபுரம் கடற்கரை கோவில், கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்ட செங்கல்பட்டு மாவட்ட கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்து வருகின்றனர்.

இரு குழுக்களாக மீனவர்கள் உதவியுடன் கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம் கடலுக்கு சென்று மீனவர்கள் போர்வையில் எவரேனும் புதிய ஆட்கள் உள்ளனரா? என சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை மாலை 6மணி வரை இந்த ஒத்திகை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com