சேத்தியாதோப்பு பேரூராட்சியில் அடிபம்புடன் சேர்த்து சாலை அமைத்த வினோதம் - பொதுமக்கள் அதிருப்தி

அவசர காலங்களில் மாற்று ஏற்பாடாக கை அடிபம்பு மூலம் குடிநீர் பெறுவதற்காக அரசுக்கு சொந்தமான இடத்தில் கை அடிபம்பு ஏற்படுத்தப்பட்டது.
சேத்தியாதோப்பு பேரூராட்சியில் அடிபம்புடன் சேர்த்து சாலை அமைத்த வினோதம் - பொதுமக்கள் அதிருப்தி
Published on

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பேரூராட்சி வடக்கு சென்னிநத்தம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

முக்கியமான மின் தடை, அவசர காலங்களில் மாற்று ஏற்பாடாக கை அடிபம்பு மூலம் குடிநீர் பெறுவதற்காக அரசுக்கு சொந்தமான இடத்தில் கை அடிபம்பு ஏற்படுத்தப்பட்டது.

இந்த அடிபம்பு பல காலமான நன்றாக உபயோகத்தில் இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சேத்தியாதோப்பு பேரூராட்சி நிர்வாகம் இப்பகுதியில் சாலை அமைத்தபோது தரையோடு தரையாக இந்த கை அடிபம்பின் பாதி பகுதியை புதைத்து சாலை அமைத்து விட்டனர்.

இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சாலை அமைத்ததால் கை அடிபம்பை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த கை அடிபம்பை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com